ஒரே நாளில் 32 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..!
சென்னையில் ஒரேநாளில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்ட உத்தரவின் படி,
நீலாங்கரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இசக்கிபாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும் ,
அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு செல்லப்பா பரங்கிமலை சட்டம் ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமன் புளியந்தோப்பு சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கும்,
அண்ணாநகர் சட்டம்- ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபு கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும் என 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதி மற்றும் ஒழுங்கீன செயல் காரணமாக காவல் ஆய்வாளர்கள் தேவைப்படும் சமயங்களில் பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் ஒரேநாளில் 32 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.