2 வாரங்களில் மட்டும் 42 பேரை துக்கிலிட்ட நாடு - அதிர்ச்சி தகவல்!
ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனை
ஈரான் நாட்டில் அதிபர் அயத்தொல்லாஹ் அலி கமெய்னி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள் கண்டித்தும் வருகின்றன. இதுகுறித்து மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 194 பேரை தூக்கிலிட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
போதைப் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களில் பாதிப்பேர் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஆண்டில் மட்டும் இந்த நாட்டில் 82 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர் என்று ஐ.எச்.ஆர் அமைப்பு கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் 333 கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan