குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம் - வெளியான அதிர்ச்சி தகவல்

Gujarat
By Thahir May 08, 2023 11:43 AM GMT
Report

குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41,162 பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.

இதில் 2016ல் 7105 பெண்களும்? 2014ல் 7,712 பேரும், 2018ல் 9,246 பேரும் 2019ல் 9,628 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டு 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம் - வெளியான அதிர்ச்சி தகவல் | 40K Women Have Gone Missing In Gujarat

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019 - 2020) 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

மனித உரிமை ஆணைய உறுப்பினர் திடுக்கிடும் தகவல் 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறும் போது சில காணாமல் போன வழக்குகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் அவ்வப்போது குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பபட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதே இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க காரணம் இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது.

ஏனென்றால் ஒரு குழந்தை காணாமல் போனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் மேலும் காணாமல் போன வாழ்க்கை ஒரு கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.