குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை : வெளியான அதிர்ச்சி தகவல்

Viral Video
By Irumporai May 07, 2023 09:35 AM GMT
Report

குஜராத்தில் ஐந்தாண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர்

குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை : வெளியான அதிர்ச்சி தகவல் | 40000 Girls Have Gone Missing Gujarat Five Years

அதிர்ச்சி தகவல் 

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், பெண்கள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம், சட்டவிரோதமாக கடத்திச்சென்று வேறு மாநிலத்திற்கு கொண்டு விற்பனை செய்வதாகக் கூறினார். மேலும் 2020இல் 8,290 பெண்களை சேர்த்து மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறும்போது, சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு விபச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்களா என்று விசாரித்து வருவதாகக் கூறினார்.