4,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு - வெளிவந்த ரகசியங்கள்!

Saudi Arabia Viral Photos
By Sumathi Nov 05, 2024 09:00 AM GMT
Report

 4,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழமையான நகரம்

சவூதி அரேபியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய தளத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த 4,000 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்களுக்கு al-Natah என்று பெயரிட்டுள்ளனர்.

al-Natah

இது கிமு 2400 முதல் கிமு 1400 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 பேர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டடக்கலை நிபுணரான Guillaume Charloux தலைமையிலான பிரெஞ்சு-சவுதி குழு, 14.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சுவரால் சூழப்பட்ட 50 தனித்துவமான குடியிருப்புகளை படம்பிடித்துள்ளது.

9,500 ஆண்டுகள்; நீருக்கடியில் மூழ்கிய நகரம் - நீங்காத மர்மத்தின் பிண்ணனி!

9,500 ஆண்டுகள்; நீருக்கடியில் மூழ்கிய நகரம் - நீங்காத மர்மத்தின் பிண்ணனி!

al-Natah 

தொடர்ந்து, அந்த இடத்தில் வான்வழி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நகரத்தின் சுவர்கள் ஐந்து மீட்டர் உயரம் இருந்துள்ளது.

saudi

பீங்கான் பானைகள் மற்றும் உலோக ஆயுதங்கள் உட்பட அல்-நாடாவில் காணப்படும் கலைப்பொருட்கள், சமத்துவ சமூக அமைப்புடன் ஒப்பீட்டளவில் வளர்ந்த சமுதாயத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிலையில், இது தெற்கு அரேபியாவை மத்திய தரைக்கடலுடன் இணைக்கும் தூப பாதை போன்ற பாதைகளின் அடிப்படையை உருவாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.