வறட்சியினால் வெளிவந்த 3200 ஆண்டுகள் பழமையான நகரம்; நதிக்கு அடியில் மூழ்கியிருந்த அதிசயம் - எங்கு தெரியுமா?

Iraq World
By Jiyath Aug 05, 2023 10:15 AM GMT
Report

3200 ஆண்டுகள் பழமையான நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

பழமையான நகரம்

பருவ நிலை மாற்றத்தால் உலகில் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஈராக் உள்ளது. பல மாதங்களாக அந்த நாட்டின் தென் பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் மிக முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றான மொசூல் ஆணை Tigris ஆற்றின் மீது கட்டப்பட்டது.

வறட்சியினால் வெளிவந்த 3200 ஆண்டுகள் பழமையான நகரம்; நதிக்கு அடியில் மூழ்கியிருந்த அதிசயம் - எங்கு தெரியுமா? | 3400 Old City Emerges From River In Irag Ibc

தண்ணீர் அதிகமாக இருந்ததால் பழங்கால தடையங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் கடும் வறட்சி காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் சர்வதேச தொல்லியல் துரையின் குழு ஒன்று ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் கெமுனேவில் ஆய்வு மேற்கொண்டதில் 3400 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வறட்சியினால் வெளிவந்த 3200 ஆண்டுகள் பழமையான நகரம்; நதிக்கு அடியில் மூழ்கியிருந்த அதிசயம் - எங்கு தெரியுமா? | 3400 Old City Emerges From River In Irag Ibc

இந்த ஆய்வில் கிபி 1275-1475 இல் மிட்டாணி பேரரசு இந்த நகரத்தில் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் மண் செங்கற்கள், சுவர்கள், கோபுரங்கள், பல மாடி கட்டிடங்கள் மற்றும் பல வகையான வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் போன்ற பழங்கால இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கியூனிஃபார்ம் என்ற பழங்கால எழுத்து நடையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

வறட்சியினால் வெளிவந்த 3200 ஆண்டுகள் பழமையான நகரம்; நதிக்கு அடியில் மூழ்கியிருந்த அதிசயம் - எங்கு தெரியுமா? | 3400 Old City Emerges From River In Irag Ibc

இந்த எழுத்து நடையை படித்து புரிந்து கொள்வது எளிதல்ல. தற்போது இது மொழிபெயர்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அரண்மனைகள் போன்ற கட்டிடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்

இந்த நகரம் கிமு 1350ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அழிந்துள்ளது. இங்கு பீங்கான் ஜாடிகள், களிமண், போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மிட்டாணி சாம்ராஜ்ஜியத்தின் மண் சுவர்கள் இவ்வளவு காலம் நீரில் மூழ்கியிருந்தாலும் இன்னும் அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மிட்டாணி கால நகரத்தின் முடிவு பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.