400 கிலோவில் பூட்டு - அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசு - நெகிழவைத்த தம்பதிகள்..!
அயோத்தி ராமர் கோவில் குறித்து தான் தற்போது இந்திய நாடே பேசி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில்
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இக்கோவில் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
மிகவும் பிரமாண்டமான இக்கோவிலுக்கு தற்போது பூட்டும் மிகவும் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. அதாவது சுமார் 400 கிலோ எடையில் இந்த பூட்டு தயாராகியுள்ளது.
உத்திரபிரதேச மாநில அலிகர்(Aligarh) என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பூட்டான இது நேற்று அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள்....
இந்த பூட்டானது கடந்த 2 ஆண்டுகளாக பூட்டு செய்வதில் மிகவும் கைதேர்ந்தவராக கருதப்படும் சத்யா பிரகாஷ் சர்மா மற்றும் ருக்மணி சர்மா தம்பதிகளால் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பூட்டை செய்து முடிப்பதற்கு முன்பாகவே சத்யா பிரகாஷ் சர்மா மரணித்துள்ளார். இது குறித்து பேசிய அவரின் மனைவி ருக்மணி சர்மா, இந்த பூட்டினை அயோத்தி அளித்திட வேண்டும் என்ற நோக்கில் தான் தனது கணவர் இரவு பகல் பாராமல் இதனை செய்வதில் செலவிட்டார் என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
லாரியில் கொண்டு வரப்பட்ட இந்த பூட்டு, கிரேன் மூலம் கீழறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த பூட்டு கோவிலுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.