ஆசையாய் சாப்பிட்ட குல்பி ஐஸ்; 40 சிறுவர்கள் உட்பட 85 பேர் வாந்தி, மயக்கம் - பரபரப்பு!
குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உள்பட 85 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
குல்பி ஐஸ்
விழுப்புரம், முட்டத்தூர் கிராமத்தில் மொபெட்டில் வந்தவரிடம் சிறுவர், சிறுமிகள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து, இரவு 10 மணிக்கு ஐஸ் சாப்பிட்ட சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சிறுவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட மொத்தம் 40 சிறுவர்கள் உள்பட 85 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாந்தி, மயக்கம்
சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் குல்பி ஐஸில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா அல்லது கெட்டு போன ஐஸை குழந்தைகளுக்கு கொடுத்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்மநபரை தேடி வந்த நிலையில் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.