மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - வெளியான தகவல்!
ரவீந்தர் தனக்கு உடல்நிலை சரியில்லை என பதிவில் தெரிவித்துள்ளார்.
ரவீந்தர்-மகாலட்சுமி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். சமீபத்தில் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, திருமணத்திற்கு பிறகான மனைவி மகாலெட்சுமியின் பிறந்தநாளை ரவீந்தர் சிறப்பாக கொண்டாடினார். மேலும் அவருக்கு மல்லிகை பூவை பரிசாக வழங்கி இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல.
உடல்நலக் குறைவு
என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கையில் லெமன் ஜூஸ், டேபிளில் பிரெட் மற்றும் பழங்கள் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, டயட்டில் இருப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.