அம்மாவை பார்த்த அதிர்ச்சி..மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 4 வயது சிறுமி - நடந்தது என்ன?
4 வயது சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 வயது சிறுமி
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிகளுக்கு பிரஹர்ஷிகா (4) என்ற மகள் உள்ளார்.இந்நிலையில் லாவண்யா கடந்த 2 தினங்களுக்கு முன் க்ரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதுவதற்காகச் சிறுமி பிரஹர்ஷிகாவை தனது தாய் வீட்டில் சென்றுள்ளார்.
பின்னர் தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்த லாவண்யாவை பார்த்த குழந்தை அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடினார். அப்போது, வீட்டின் வாசற்படியில் பிரஹர்ஷிகா திடீரென சரிந்து விழுந்தார்.
மாரடைப்பு
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாவண்யா ஓடிச் சென்று மகளைத் தூக்கினார். அப்போது தனது தாயிடம் நெஞ்சு வலிப்பதாகச் சிறுமி கூறி மயங்கியுள்ளார். இதனையடுத்து சிறுமி பிரஹர்ஷிகாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.