5வது மாடியில் இருந்து விழுந்த நாய் - சாலையில் சென்ற 4 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
5-வது மாடியில் இருந்து நாய் ஒன்று விழுந்து, 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழப்பு
மஹாராஷ்டிரா, மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 4 வயது சிறுமி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 5வது மாடியில் இருந்து, சிறுமியின் தலையில், திடீரென நாய் ஒன்று விழுந்துள்ளது.
இதில், சிறுமி மயக்கமடைந்துள்ளார். உடனே, தாய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீஸார் விசாரணை
இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். இதற்கிடையில், சிறுமி மீது விழுந்த நாய், அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சிறுமியின் தலையில் நாய் விழும் போது, அருகில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில், நாய் தவறுதலாக விழுந்ததா, அல்லது வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.