4 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அடித்துக் கொன்ற 22வயது இளைஞர்!
4 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி 22வயது இளைஞர் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஒடிசா, கஞ்சம் முன்டாமரே என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன், திடீரென மாயமாகியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் சிறுவனின் வீட்டார் அவனை தேடித் தொடங்கி அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுவனை பக்கத்து வீட்டில் பார்த்தாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்ததில் வீட்டு மாடியில் மாயமான சிறுவன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளான். உடனே மருத்துவமனை அழைத்துச் சென்றதில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவனுக்கு கொடுமை
தொடர்ந்து பெற்றோர்கள் போலீஸாரிடம் புகாரளித்தனர். இளைஞரை கைது செய்து விசாரித்ததில் 22 வயது இளைஞர் இன்ஜினியரிங் மாணவர். சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்
வீட்டு மாடியில் உள்ள இரும்புக் கதவில் மோதி அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.