மூளையை தின்னும் அமீபா காய்ச்சல்; 4 பேர் பாதிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
அமீபா மூலைக்காய்ச்சல் மேலும் 4 பேருக்கு பாதிப்பு எற்படுள்ளது.
அமீபா காய்ச்சல்
கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உடலுக்குள் சென்று மூளையில் தாக்கத்தை உண்டாகின்றனர்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள 4 பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதில் மூவரின் பரிசோதனையில் மூவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
4 பேர் பாதிப்பு
இதை தொடர்ந்து, அந்த 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து,தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.