Newspaper-ன் கீழ்ப் பகுதியில் 4 வண்ண வட்டங்கள் - என்ன அர்த்தம் தெரியுமா?ஆச்சரியப்படுவீங்க!

India World
By Vidhya Senthil Dec 14, 2024 11:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 செய்தி தாள்களின் கீழ்ப் பகுதியில் 4 வண்ண வட்டங்களுக்காக அர்த்தம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 செய்தி தாள்

மக்கள் மத்தியில் இன்றளவும் செய்தித்தாள் வாசிப்பு ஆர்வர் குறையாமல் இருந்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வருவதால் செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள செல்போனில் பல ஆப் வந்துள்ளது. ஆனால் நியூஸ் பேப்பரில் செய்தியைப் படித்தது போன்ற திருப்தி கிடைப்பது இல்லை என்றே கூறலாம்.

Newspaper

இத்தகைய சிறப்பு மிக்க செய்தித் தாள்களில் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் 4 வண்ணங்களில் வட்டங்கள் இருக்கும். இந்த வட்டங்கள் எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் யோசித்தது உண்டா? இந்த பதிவில் 4 வண்ண வட்டங்களுக்காக அர்த்தம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிகோங்க!

ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிகோங்க!

 4 வண்ண வட்டம்

செய்தித்தாள்களில் உள்ள நான்கு வண்ண வட்டங்கள் CMYK மாதிரியைக் காட்டுகின்றன.Cஎன்பது சியான் (நீலம்), M என்பது மெஜந்தா, Yஎன்பது மஞ்சள் மற்றும் Kஎன்பது கருப்பு நிறங்களைக் குறிக்கிறது. இவை செய்தித்தாள்கள் அச்சிடும்போது, ​​4 வண்ணங்களில் ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Newspaper

செய்தித்தாள்களில் கூர்மையான மற்றும் நேர்த்தியான படங்களைப் பெறுவதற்கு இந்த வண்ண புள்ளிகள் முக்கியமானது. சீரமைப்பு சரியாக இல்லாவிட்டால், அது ஒரு மங்கலான படத்தை உருவாக்கும் என்பதால் இந்த 4 வண்ணங்கள் செய்தித் தாளின் கீழே சிறிய வண்ண வட்டங்கள் அச்சிடப்படுகின்றன.