கடவுள் குறித்து பேஸ்புக் கமெண்ட் - 4 பேருக்கு மரண தண்டனை
இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் கமெண்ட்
பாகிஸ்தான் 96.5% இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் வாழும் இஸ்லாமிய நாடாகும். இங்கு இஸ்லாம் குறித்தோ அதன் புனித நூலான குரான் குறித்தோ அவதூறாக பேசுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்நிலையில் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இளைஞர்கள் 4 பேர் வெல்வேறு ஐடிகளில் இஸ்லாமிய மதம் குறித்தும், அதன் கடவுளான நபிகள் நாயகம் குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை
இது குறித்து சிராஜ் பரூக்கி என்பவர் ராவல்பிண்டியை சேர்ந்த 4 நபர்கள் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு லாகூரில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது தரிக் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வாஜித் அலி, அபாக் அலி சாஹிப், ராணா உஸ்மான், சுலேமான் சஜித் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து 80 ஆண்டுகள் சிறை மற்றும் மரண தண்டனையளித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், அவர்களுக்கு 4.6 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்(இந்திய மதிப்பில் ரூ.14 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தனிப்பட்ட பழிவாங்கலுக்கும், சிறுபான்மையினரை குறிவைப்பதற்குமே பயன்படுத்தப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.
யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு IBC Tamil