17 வயது சிறுமியை மிரட்டி சீரழித்த 4 காவலர்கள் - பாதுகாப்பவரே பாதகம் செய்த கொடுமை!

Sexual harassment Crime Tiruchirappalli
By Vinothini Oct 06, 2023 05:15 AM GMT
Report

காவலர்கள் 4 பேர் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்கள்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 4-ம் தேதி முக்கொம்பு மேலணை சுற்றுலாத்தலத்திற்கு சென்ற இவர்கள் மதியம் அங்கு தனியாக அமர்ந்து பேசிக் பேசிக்கொண்டிருந்தனர்.

காவலர்கள் 4 பேர்

அப்போது அங்கு காவலர் சீருடையில் வந்த மூன்று பேர், தங்களை போலீசார் என்று கூறி "யார் நீங்கள் இங்க என்ன பண்றீங்க" என்று அந்த காதலனை மிரட்டி அவரிடம் இருந்து மொபைல் எண்ணை வாங்கியுள்ளனர். பின்னர் உங்கள் வீட்டிற்கு அழைத்து கூறுகிறேன் என்று மிரட்டியதும் அதற்கு "நாங்கள் இருவரும் வீட்டிற்கு தெரிந்து தான் காதலிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

6 மாத கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்த 5 காதலர்கள் - அதிர்ச்சி!

6 மாத கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்த 5 காதலர்கள் - அதிர்ச்சி!

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், அந்த இளைஞரை காவலர் உடையில் இருந்தவர்கள் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் இந்த சிறுமியிடம், "காரில் எஸ்.ஐ., சார் இருக்காரு.. அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போ" என்று கூறி கார் அருகே அழைத்துள்ளனர். பின்னர் காரில் வைத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.

கைது

இதனை அறிந்த காதலர் முக்கொம்பில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். அப்பொழுது போலீசர் விசாரித்தபொழுது, "நாங்கள் அனைவரும் எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார். இந்த ஜோடிகள் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது அதனால் விசாரித்தோம்" என்று கூறி சென்றுவிட்டனர்.

காதலன் உடனடியாக அவசர எண்- 100க்கு போன் செய்து நடந்த சம்பவத்தை விபரமாக விளக்கி கூறியுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தினர். அப்பொழுது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஓட்டுநர் சங்கரபாண்டி மற்றும் நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத் என்றும்.

திருவெறும்பூர் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஓட்டுநர் சங்கரபாண்டி, நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத், துவாக்குடி காவல்நிலைய காவலர் சித்தார்த் ஆகியோர்த் ஆகியோர் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததும், அதன் பிறகு சிறுமியை பிடித்து விசாரணை என்கிற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் இவர்களை பணி நீக்கம் செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.