உல்லாசத்துக்கு அழைத்த பெண்; ஆசையாய் ஓடிய இளைஞர்..அங்கு ரூமுக்குள் 4 பேர் - என்னாச்சு தெரியுமா?
இளைஞர் ஒருவரை இளம்பெண் உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்ததாக தெரியவந்துள்ளது.
அழைத்த பெண்
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தாபா (20). இவர் தமிழ்நாட்டிலேயே தங்கி ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்போன் ஆப் மூலம் இளம் பெண் ஒருவருடன் பழக்க ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பெண் உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.
இந்த பெண் சென்னை வடபழனியில் வசிக்கிறார். இதனிடையே உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு விஜய், உடனே அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதன்பிறகு இதற்கு பேசிய காசை விட கூடுதலாக கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓடிய இளைஞர்..
அப்போது திடிரென வீட்டின் மற்றொரு ரூமில் இருந்து திருநங்கை மற்றும் 2 பேர் விஜய்யை ரவுண்டு கட்டினார்கள். அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக இளைஞரை மிரட்டியுள்ளனர். அத்துடன், அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும் பறித்து விட்டு மிரட்டி வெளியே அனுப்பியுள்ளனர்.
உயிர் தப்பினால் போதும் என அங்கிருந்து பயந்து விஜய் ஓடியும் விடாமல் அந்த கும்பல் போன் செய்து மிரட்டியுள்ளது. மேலும், பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை விஜய் செல்போனுக்கு அனுப்பி வைத்து அந்த கும்பல், சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக சொல்லி, மீண்டும் பணம் கேட்டுள்ளது.
இதனால் விஜய்தாபா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய அப்ரின் பர்கானா(21), அஸ்விதா என்ற முஸ்தபா (26) என்ற திருநங்கை மற்றும் தினேஷ்குமார் (25), பரத்குமார் (24) ஆகிய 4 பேரையுமே போலீசார் செய்துள்ளன்னர்.