ஆன்மீக விடுதலை அடையனும்; மூடநம்பிக்கையால் 4 பேர் ஹோட்டல் அறையில் செய்த பகீர் செயல்!

Tiruvannamalai Crime Death
By Sumathi Dec 29, 2024 03:49 AM GMT
Report

மூடநம்பிக்கையால் 4 பேர் விஷம் அருந்து தற்கொலை செய்துள்ளனர்.

மூடநம்பிக்கை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ருக்மணி(45). இவரது குழந்தைகள் ஜலந்தாரி (17) மற்றும் முகுந்த் ஆகாஷ் குமார் (12). கணவரிடமிருந்து விவாகரத்தான நிலையில் ருக்மணி தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆன்மீக விடுதலை அடையனும்; மூடநம்பிக்கையால் 4 பேர் ஹோட்டல் அறையில் செய்த பகீர் செயல்! | 4 People Suicide To Superstition Tiruvannamalai

மூவரும் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடந்து மூவரும் சில மாதங்களுக்கு முன்பு இதே வியாசார்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ மஹாகாலா வியாசர் (40) எனும் நபரை சந்தித்துள்ளனர். ஆன்மீகத்தின் மீது அதீத பற்று இருந்ததினால் அவர்கள் 4 பேரும் ஒன்றாகவே ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் கார்த்திகை தீபத் திருநாளன்று ஒன்றாக திருவண்ணாமலை சென்று சென்னை திரும்பியுள்ளனர். பின் மீண்டும், சிவன் மற்றும் மஹாலட்சுமி தேவியின் திருவடிகளை சென்றடைந்து மோட்சம் பெறவுள்ளதாக கூறி திருவண்ணாமலை சென்றுள்ளனர். பின்னர் அங்கு ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

[AKE6VES

4 பேர் தற்கொலை

நீண்ட நேரமாகியும் உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் அவர்களது கதவு திறக்கப்படாமல் இருந்ததினால், அந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு புகாரளித்துள்ளனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆன்மீக விடுதலை அடையனும்; மூடநம்பிக்கையால் 4 பேர் ஹோட்டல் அறையில் செய்த பகீர் செயல்! | 4 People Suicide To Superstition Tiruvannamalai

மேலும், அவர்கள் ஆன்மீக விடுதலை அடையும் நோக்கில் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இத்துடன் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் விடியோவும் அவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.