4 மாசம் தான ஆகுது அதுக்குள்ள இப்படி ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட்டா? அசத்தும் குழந்தை
பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
4 மாச குழந்தை
பிறந்த நான்கு மாதங்களேயான குழந்தை ஒன்று உலக சாதனை படைத்து செய்தி கேட்டும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரஜ்வல் - சினேகா தம்பதியரின் மகளான இஷான்வி என்ற இக்குழந்தையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே, குழந்தையின் பெற்றோர் இரண்டு ஃபிளாஷ் கார்டுகளைப் போட்டு, அடையாளம் காட்ட கேட்டபோது, அக்குழந்தை சரியான அட்டையைத் தேர்ந்தெடுத்து அசத்தியுள்ளது. குழந்தையின் புத்தி கூர்மையை உணர்ந்த தாய் குழந்தைக்கு வெவ்வேறு விதமான ஃபிளாஷ் பரிட்சயப்படுத்தியுள்ளார்.
பல்வேறு பொருள்கள், விலங்குகள், பறவைகள், காய்கறி என புகைப்படங்கள் இஷான்வி சரியாக அடையாளம் காண துவங்கியுள்ளார். 4 மாதத்திலேயே 15 காய்கறிகள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள், 11 வண்ணங்கள், 10 பறவைகள், 10 காட்டு விலங்குகள், 10 வளர்ப்பு விலங்குகள், 10 விதமான நாட்டுக் கொடிகள், 10 வாகனங்கள், போன்றவற்றை சரியாக அடையாளம் காண துவங்கியுள்ளார்.
இதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு நோபல் வேர்ல்டு ரெக்கார்டுக்கும் குடும்பத்தினர் அனுப்பியுள்ளார். அங்கு இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.