ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - என்ன நடந்தது?
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் தற்கொலை
சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன்(52). இவரது மனைவி சுமதி(47). இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 4 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், உடனே விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லை
தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடி மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.