youtube வீடியோ பார்த்து டயட் இருந்த இளம்பெண்.. கடைசியில் நேர்ந்த கதி- பகீர் தகவல்!
6 மாதங்களாக டயட் இருந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீநந்தா, தனது உடல் எடையைக் குறைக்க ஆன்லைனில் டயட் தொடர்பான வீடியோக்களை பார்த்து கடந்த 6 மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வந்ததாகத் தெரிகிறது.
மேலும், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீநந்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டயட்
அப்போது முறையாக உணவு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.அதனை மீறியும் மாணவி ஸ்ரீநந்தா தொடர்ந்து டயட் இருந்த நிலையில், 24 கிலோ எடையுடன், ரத்த சர்க்கரை அளவு குறைந்து, குடல் சுருங்கியுள்ளது.
இதனையடுத்து மீண்டும் தலசேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீநந்தா உயிரிழந்தார்.