கொசுவை கொல்லும் லிக்விட் மெஷின்.. உறங்கிய குழந்தைகள் உட்பட 4 பேரை கொன்ற சோகம்!
கொசுக்களை விரட்டும் லிக்விட் மெஷின் 4 பேரின் உயிரை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
சென்னையை அடுத்த உள்ள மணலி என்ற பகுதியில் எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருபவர் உடையார். சில நாட்களுக்கு முன்பு இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது இவரது காலில் அடிபட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரை கவனித்து கொள்வதற்க்காக அவரது மனைவி மருத்துவமனையில் இருந்துள்ளார். இவர்களது 3 குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக அந்த பெண்ணின் தாய் ஊரிலிருந்து வந்துள்ளார்.
கொசு கொல்லி
இந்நிலையில், குழந்தைகளுடன் பாட்டியும் சேர்ந்து வீட்டில் இருந்துள்ளனர். இவர்களது குடியிருப்பு பகுதியில் கொசு தொல்லை அதிகம் அதனால் கொசு விரட்டும் லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தபொழுது அந்த மெஷின் சூடாகி உருகியது.
அது உருகி அருகில் இருந்த அட்டப்பெட்டி மீது விழுந்ததில் புகை அதிகாரித்துள்ளது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நான்கு பெரும் உயிரிழந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அதிகாலையில் எழுந்து வந்து பார்த்தபோது அந்த வீட்டு ஜன்னலில் இருந்து புகை வந்ததை பார்த்தனர். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, நான்கு பேரும் உயிரிழந்தனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.