இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள் - பகீர்!

Sexual harassment Crime Punjab
By Sumathi 1 வாரம் முன்

இளைஞரை, 4 இளம்பெண்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் கடத்தல்  

பாஞ்சாப், ஜலந்தரில் ஒரு பேக்டரியில் தொழிலாளியாக வேலை செய்யும் நபர் ஒருவர், பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அதில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்கள் 4 பேரி துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் முகவரி விவரம் கேட்டுள்ளனர்.

இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள் - பகீர்! | 4 Girls Kidnapped Raped A Man In Punjab

அவரும் அதை வாங்கி படித்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண்கள் அவர் மீது ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளனர். அதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை 

அதன்பின் காரை நிறுத்தி அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனையடுத்து அவரது கை மற்றும் கண்களை கட்டி எங்கோ இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கையில், அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர். அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்தினர்.

அதன் பிறகு நான்கு இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் 4 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.