குடை, ரெயின்கோட் முக்கியம்... தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு இந்த 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை!

Tamil nadu Regional Meteorological Centre
By Vinothini Sep 18, 2023 01:30 PM GMT
Report

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.n

கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4-days-rainfall-report-by-meteorological-centre

சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

4 நாட்களுக்கு

இந்நிலையில், 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4-days-rainfall-report-by-meteorological-centre

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.