சுட்டெரிக்கும் வெயில்; அதிகரிக்கும் வெப்பநிலை அடுத்த 4 நாள் கொளுத்த போகுது மக்களே உஷார்!
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை வீசப்போகும் வெப்பஅலை எச்சரிக்கை அளித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.
அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது. இந்த கடும் வெயிலில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
வெப்பநிலை
இந்த நிலையில், இன்று முதல் வரும் 30ம் தேதி வரை உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இனி வரும் நாட்களில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவிதந்துள்ளனர்.