தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் உச்சத்தை தொடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Mar 05, 2024 10:58 AM GMT
Report

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வறண்ட வானிலை

இதுதொடர்பாக "சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 05.03.2024 முதல் 11.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் உச்சத்தை தொடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Maximum Temperature Will Rise Up To 3 Degree

அதேபோல 05.03.2024 மற்றும் 06.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு!

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு!

மேகமூட்டம் 

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் "அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் உச்சத்தை தொடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Maximum Temperature Will Rise Up To 3 Degree

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.