சொகுசு விடுதியில் குவிந்து கிடந்த பணம்; சிக்கிய 4.5 கோடி - தேர்தல் களத்தில் பரபரப்பு!
தனியார் சொகுசு விடுதியில் நான்கரை கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் களம்
கர்நாடகா, கோலாரில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பங்கார்பேட் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில், நான்கரை கோடி ரூபாயும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விடுதியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் யாதவ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
பரபரப்பு
அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த பகுதியில் நடத்த இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார்.