4 கோடி வழக்கு - நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

Tamil nadu BJP Lok Sabha Election 2024
By Karthick May 29, 2024 04:59 AM GMT
Report

4 கோடி சிக்கிய வழக்கில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 

4 கோடி

தேர்தல் விதிமுறை அமலில் இருந்த போது சென்னை எழும்பூரில் புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

4 crore case nayinar nagendran summoned

மேலும், அதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ரூ.4 கோடி..பேசுறதுக்கு ஒன்னும் இல்ல.. நடவடிக்கை எடுக்கணும் - மவுனம் கலைத்த அண்ணாமலை

ரூ.4 கோடி..பேசுறதுக்கு ஒன்னும் இல்ல.. நடவடிக்கை எடுக்கணும் - மவுனம் கலைத்த அண்ணாமலை

அதன் அடிப்படையில், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

நாயினாருக்கு சம்மன் 

இது தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவிநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் , நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

4 crore case nayinar nagendran summoned

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் நாளை மறுநாள் (31 மே 2024 ) நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.