சென்னையில் பரபரப்பு..! பயங்கர சத்தத்துடன் கழன்ற மின்சார ரயில் பெட்டி - அலறிய பயணிகள்
சென்னையில் இயங்கி வரும் மின்சார ரயிலின் பெட்டிகள் திடீரென கழன்றதால் அங்கு பாரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மின்சார ரயில்
சென்னையில், கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று காலை வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சைதாப்பேட்டை அருகே வந்த போது அதன் பெட்டிகள் திடீரென கழன்றது.
இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் காலை 5.30 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென ரயிலின் 4 பெட்டிகள் இணைக்கும் பகுதி கழன்று வந்ததால் ரயிலை சரி செய்ய தாம்பரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்காலிக ரயில் நிறுத்தம்
இந்நிலையில், அவ்வழியாக ரயில்கள் ஏதும் வராததால் கோடம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம்,பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இதையடுத்து அலுவலகம் பல்வேறு பணிகளுக்கு செல்ல போக்குவரத்து பாதிக்கப்படும் என அறிந்து உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர் இந்த வழியாக வரும் மற்ற ரயில்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த கழன்று சென்ற பெட்டிகளை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.