ஜெயலலிதா முதல் பொன்முடி வரை.. சிறைத்தண்டனையால் அமைச்சர் பதவி இழந்தவர்கள்!
சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழக்கும் 3வது நபர் அமைச்சர் பொன்முடி ஆவார்.
பொன்முடிக்கு சிறை
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.50 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி பதவிகளில் இருப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
பதவி இழப்பு
மேலும், மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிப்பு என்பது திரும்பப் பெறப்படும். இந்நிலையில் தமிழகத்தில் அமைச்சராக இருந்து பதவி இழக்கும் 3வது நபர் பொன்முடி ஆவார்.
இதற்கு முன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றதால் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல் அதிமுக ஆட்சியின்போது பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சராக இருந்தபோது சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார்.