சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்!

Brazil Accident World
By Vidhya Senthil Dec 22, 2024 02:53 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

   பிரேசிலில் நடந்த பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில்

பிரேசில் மினஸ் கரேஸ் மாகாணத்திலிருந்து 45 பயணிகளுடன் நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது.தியொபித்லோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது.

Bus accident in Brazil

இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது நெடுஞ்சாலையில் அதிக வேகமாகச் சென்று எதிரே வந்த லாரி மீது மோதியது.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 38 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு - எங்க நடந்தது தெரியுமா?

8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு - எங்க நடந்தது தெரியுமா?

  38 பேர் பலி

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bus accident in Brazil

மேலும் நடப்பு ஆண்டில் மட்டும் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.