கட்டு கட்டாய் பணம் - முன்னாள் மத்திய அரசு அதிகாரி வீட்டில் ரூ.38 கோடி பறிமுதல்

Delhi Crime
By Sumathi May 04, 2023 04:45 AM GMT
Report

மத்திய அரசு நிறுவன முன்னாள் தலைவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.38 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் குடிநீர் மற்றும் மின் ஆலோசனை சேவை நிறுவனம் (வாப்கோஸ்) செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் ரஜிந்தர் குமார் குப்தா.

கட்டு கட்டாய் பணம் - முன்னாள் மத்திய அரசு அதிகாரி வீட்டில் ரூ.38 கோடி பறிமுதல் | 38 Crore Seized Former Central Government Official

இவரது மனைவி ரீமா சிங்கல். இவருக்கு மகன் கவுரவ், மருமகள் கோமல் உள்ளனர். 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

38 கோடி பறிமுதல்

அதனைத் தொடர்ந்து, டெல்லி, குருகிராம், சண்டிகார், சோனிப்பட்டு, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினார்கள்.

அதில், ரூ.38 கோடி பணம் சிக்கி உள்ளதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ய்வுக்கு பின்னர் குடும்பத்தினர் டெல்லியில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, ராஜிந்தர் குமார் குப்தாவையும், அவரது மகன் கவுரவ் சிங்காலையும் கைது செய்துள்ளனர்.