பாலியல் வன்கொடுமை வழக்கு; 37 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை - ரூ.100 கோடி இழப்பீடு!
செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நபருக்கு ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உள்ளது.
சிறை தண்டனை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டுபோயிஸ். இவர், பார்பரா கிராம்ஸ் என்ற 19 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக தனது 18 வயதில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமோஸ் ராபின்சன், அப்ரோன் ஸ்காட் ஆகியோர்தான் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.100 கோடி இழப்பீடு
இதனையடுத்து 19 வயதில் சிறைக்கு சென்ற டுபோயிஸ் 37 ஆண்டுகளுக்கு பிறகு, தனது 56 வயதில் விடுதலையானார். பின்னர் தவறான குற்றத்திற்கு தண்டனை அனுபவித்ததற்கு எதிராக தம்பா நகரின் மீது டுபோயிஸ் வழக்கு தொடர்ந்தார்.
இதன் மூலம், செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த டுபோயிஸுக்கு தம்பா நகர கவுன்சில் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உள்ளது.