200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. துடிதுடித்து 36 பேர் பலி - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Uttarakhand Accident Death
By Vidhya Senthil Nov 04, 2024 12:35 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

   உத்தராகண்ட் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தராகாண்ட் 

உத்தராகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பவுரி என்ற பகுதியிலிருந்து 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று ராம் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.அப்போது மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது.

Uttarakhand bus accident

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இந்த பயங்கர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில்  விபத்து குறித்து உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விபத்து 

அதில் அல்மோரா மாவட்டத்தில் நடந்த விபத்து இதயத்தை உலுக்கி உள்ளது.மேலும் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரமான இந்த நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்போம்.

Uttarakhand bus accident death 36

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.