லட்டு விவகாரம்.. கோபி-சுதாகரை மிரட்டும் பாஜக? ஒன்று சேர்ந்த 35 பிரபல யூடியூபர்கள்!

BJP Tirumala Parithabangal Gopi
By Vidhya Senthil Oct 02, 2024 11:09 AM GMT
Report

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக பாஜகவினர் மிரட்டுவதாக 35 பிரபல யூட்யூபர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 கோபி- சுதாகர்

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானதில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு ஒரு தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திருப்பதி லட்டு இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது.

parithabangal

திரு.சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.  அதைபோல், 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனளில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவுக்கு தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதை வெளியிட்ட கோபி -சுதாகரை மிரட்டி, அந்த வீடியோவையே நீக்கச் செய்துள்ளனர். நகைச்சுவை மூலமாக நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கலை வடிவம், நிகழ்த்துக்கலைகளில் மிக முக்கியமானது. இந்த கலை வடிவத்தை பின்பற்றும் கோபி - சுதாகர், மக்களை சிரிக்கவைப்பதுடன் சிந்திக்க வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவில் என்ன பிரச்சனை? உணவு பாதுகாப்புத்துறை தகவல்

மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவில் என்ன பிரச்சனை? உணவு பாதுகாப்புத்துறை தகவல்

ஆனால், இந்தக் கலைவடிவம் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணியை மறுதலிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமையை காலில்போட்டு மிதிக்கும் வகையிலும், கோபி சுதாகருக்கு எதிராக மிரட்டல் விடுத்து வரும் பாஜகவைசேர்ந்த தலைவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

 35 பிரபல யூட்யூபர்கள்

இதேபோல், குணால் கம்ரா, முனாவர் ஃபரூக்கி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதுடன் அவர்கள் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

கோபி சுதாகர் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் தொழிலை முடக்கும் வகையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டுவருகின்றனர். ஆகவே, கோபி - சுதாகர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

tirumala laddu issue

அத்துடன் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது எனவே கருத்துரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்

'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் வெளியிட்ட திருப்பதி வட்டு குறித்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.என கூறப்பட்டுள்ளது.