லட்டு விவகாரம்; சிக்கலில் பரிதாபங்கள் - புகார் அளித்த பாஜக

Youtube Tamil nadu BJP Andhra Pradesh Parithabangal Gopi
By Karthikraja Sep 26, 2024 01:08 PM GMT
Report

 லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் யூ டியூப் சேனல் மீது பாஜக புகார் அளித்துள்ளது.

திருப்பதி லட்டு

கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

tirupathi laddu

ஆய்வு முடிவில் திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது உறுதியானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பரிதாபங்கள்

இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க கோவிலில் யாகம் நடத்தப்பட்டது. 11 நாள் கடும் தவம் இருக்கப்போவதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்தார்.  


இந்நிலையில் 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட பிரபல youtube சேனலான 'பரிதாபங்கள்' தங்களது வழக்கமான பாணியில் லட்டு விவகாரத்தை ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். 

இந்த வீடியோ வெளியான சில நேரங்களில் நாடு முழுவதும் பரவி பல லட்சம் பார்வைகளை பெற்றது. இதனையடுத்து வீடியோவை youtube தளத்தில் இருந்து பரிதாபங்கள் குழு நீக்கியது.

பாஜக புகார்

மேலும், இது நகைச்சுவைக்காகவே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தவில்லை. மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. சார்பில் பரிதாபங்கள் யூட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க.வை சார்ந்த அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த புகார் மனுவில், “வீடியோவை நீக்கினாலும் இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது. 

மேலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதோடு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை அவமதிப்பது போல் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.