34 வயதிலேயே பாட்டியான பிரபலம் - யார் அவர் தெரியுமா?
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகியுள்ளார்.
இன்ஸ்டா பிரபலம்
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஷிர்லி லிங். இந்தப் பெண் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வலம் வருகிறார்.
அண்மையில், அன்னையர் தினத்தன்று வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இளம்வயதில் பாட்டி
மேலும், இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும்.
தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங் 17 வயதில் திருமணம் செய்து, 3 முறை மறுமணம் செய்த அவர்,
தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.
இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.