19 வயது இளம் பிரபலம் திடீர் மரணம்;48 மணி நேரத்தில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மரியா சோபியா
பிரேசில் நாட்டில் சமூக வலைத்தள பிரபலமாக இருந்தவர் மரியா சோபியா வலிம் (19). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவிட்டு பிரபலமானார்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரியா சோபியாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
உயிரிழப்பு
இதனையடுத்து கொடையாளர் ஒருவர் அவருக்கு கல்லீரல் வழங்கி, வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையும் முடிந்துள்ளது. ஆனால் சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள்ளேயே மரியா உயிரிழந்துள்ளார்.
இதனை அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். மரியா சோபியா வலிம் உயிரிழந்த சமத்துவம் அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை பின்தொடர்பவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.