தொடர் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - குழந்தைகள் உட்பட 34 பேர் பலியான சோகம்!

Pakistan Death
By Vinothini Jun 12, 2023 08:12 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 34 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம்

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

34-people-died-in-heavy-flood

மேலும், பேரிடர் குழுவால் மீட்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

பிரதமர் இறங்கல்

இதனை தொடர்ந்து, பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34-people-died-in-heavy-flood

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.