இந்த நாட்டிலெல்லாம் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் - எங்கெல்லாம் தெரியுமா?
34 நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தன் பாலின திருமணம்
இந்தியாவில் தன் பாலின திருமணத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னதாகவே பல நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கூபா, அன்டோரா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டரிகா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம்,\
சட்டப்பூர்வ அங்கீகாரம்
பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மால்டா, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன்,
மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் தைவான் முதல் நாடாக தன் பாலின திருமணத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.