62 வயது மூதாட்டியுடன் உறவில் இருந்த 32 வயது இளைஞன் - கடைசியில் நேர்ந்த விபரீதம்!

Sexual harassment
By Vinothini May 09, 2023 06:05 PM GMT
Report

 62 வயது மூதாட்டியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 32 வயது இளைஞன் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார்.அப்போது ஆக்ராவில் 32 வயதான ககன்தீப் என்பவர் வைத்திருந்த ஹோட்டலில் தங்கியுள்ளார்.

32-years-old-indian-man-cheated-american-women

தொடர்ந்து, அவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது, இதனால் அந்த அமெரிக்க பெண் அடிக்கடி இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இளைஞன் செய்த காரியம்

இந்நிலையில், அந்த இளைஞன் அவரை திருமணம் செய்வதாக கூறி அவருடன் பாலியல் ரீதியாக பலமுறை உறவு வைத்துள்ளார்.

32-years-old-indian-man-cheated-american-women

இவை அனைத்தும் அவரின் குடும்பத்தினருக்கும் தெரிந்தே நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த அமெரிக்கா பெண் தன்னிடம் பாலியல் ரீதியாக உறவு மட்டுமே வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் அவர் மீது சந்தேகம் வந்துள்ளது.

இதனால், அவர் கடந்த மே 4ஆம் தேதி டெல்லியில் இருக்கும் விவேக் விஹார் காவல் நிலையத்தில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

பின்னர் ககன்தீப் மீது ஐ.பி.சி 376, 328 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவரை ஆக்ராவில் கைது செய்தனர்.