கோவில் பணியாளர்களுக்கு ரூ.3000 கருணைக்கொடை - முதலமைச்சர் அறிவிப்பு

M K Stalin Tamil nadu
By Sumathi Jan 10, 2023 11:22 AM GMT
Report

கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைகொடையாக ரூ,3000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கோவில் பணியாளர்

திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கோவில் பணியாளர்களுக்கு ரூ.3000 கருணைக்கொடை - முதலமைச்சர் அறிவிப்பு | 3000 Ex Gratia To Temple Workers

அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தின் முதல் அகவிலைப்படியை 34%இல் இருந்து 38%ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் கருணைத்தொகை ரூ.2000இல் இருந்து ரூ.3000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கருணைக்கொடை

ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெரும் கோவில்களின் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. இந்த உயர்வால் 10,000 திருக்கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், இவ்வாண்டு ரூ. 1.5 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.