உண்மையை மறைக்கும் ரஷ்யா; 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி - திடுக் தகவல்!
ரஷ்யா பலி எண்ணிக்கை உண்மையை மறைத்து விட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை
உக்ரைன் மீதான படை எடுப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், உக்ரைனிய படைகளும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகிறது.

மேலும், போரில் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் 4 மாகாணங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில், இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ள நிலையில்,
மறைக்கும் ரஷ்யா
மகீவ்கா நகரில் கடந்த 1ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 89 ரஷ்யா வீரர்கள் பலியானதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
ஆனால், ரஷ்யா உண்மை தகவலை மறைத்து விட்டதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300ஐ தாண்டும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.