36 மாடிகளில் 30 ஆயிரம் பேர் வாழ்றாங்கலாம் - அடேங்கப்பா.. இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கிருக்கிறது தெரியுமா?
36 மாடி கட்டிடத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டியுள்ளது.
அபார்ட்மென்ட்
சீனா, ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில், ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் ஒன்று உள்ளது. இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்டது.
S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 30,000 பேர் வாழ்கின்றனர். இந்த அபார்ட்மெண்ட் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. இந்த கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது.
சிறு நகரம்
இதில், ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிதிருத்தும் கடை, சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் இணைய தள மையம் ஆகியவையும் உள்ளன. இங்கு பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள்.
அதே போல கனிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள். தற்போது, இந்தக் கட்டிடம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.