3 வயது சிறுமியை வாயை கட்டி பாலியல் வன்கொடுமை - 22 வயது இளைஞர் பகீர் வாக்குமூலம்!
3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பெங்களூரூ, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. இருவரும் காலை வேலைக்குச் சென்று மாலை தான் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த சமயங்களில், அந்த குழந்தை வீட்டில் இருந்ததை அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(22) என்ற இளைஞர் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த குழந்தையின் தந்தைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
அதிர்ச்சி வாக்குமூலம்
அதில், தங்கள் மகளை சரவணன் வாயைக் கட்டி அழைத்துச் செல்வதைப் பார்த்தேன் எனப் பேசியவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பதறிப்போனவர் தேடியதில் குழந்தை குறுகிய சாலை ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உடனே குழந்தையை மீட்டு, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து உடனே விரைந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதனையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், குழந்தையின் தாய், தனது தாய், சகோதரியிடம் சண்டை போட்டதால், அவர்களைப் பழிவாங்க குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.