தகாத உறவு: 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

Sexual harassment Child Abuse Bengaluru Crime
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

 26 வயது இளைஞர், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

கர்நாடகா, பெங்களூரு தெற்குப் பகுதி போலீஸார், 3வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக 26 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரணையில், காவேரி நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

தகாத உறவு: 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்! | 3 Year Old Girl Sexually Assaulted And Killed

இவர் கணவரைப் பிரிந்து தனது 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தொடர்ந்து இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழப்பு 

இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்ததுடன், கடந்த ஓராண்டாக சிறுமியின் தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில், அந்த வாலிபர் சிறுமியை கவனித்துவந்துள்ளார்.

இந்நிலையில், அந்தச் சிறுமியை, கஞ்சா போதையில் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் மயக்கமடைந்து சிறுமி இறந்திருக்கிறார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.