3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர்கள் வெறிச்செயல்

Delhi Sexual harassment Child Abuse Crime
By Sumathi Feb 04, 2023 05:50 AM GMT
Report

3 வயது சிறுமியை 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

தெற்கு டெல்லியில் உள்ள பத்தேபூர் பேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. இவரது வீட்டின் அருகே ராம்நிவாஸ் பனிகா(27), சக்திமான் சிங் (22) என்ற இருவர் வசித்து வந்துள்ளனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர்கள் வெறிச்செயல் | 3 Year Old Girl Gang Raped In Delhi

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் வேலைக்காக டெல்லி வந்துள்ளனர். இந்நிலையில், ராணியின் குழந்தை திடீரென காணாமல் போகியுள்ளது. அக்கம்பக்கத்தினர் இரு இளைஞர்களும் குழந்தையை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மதுபோதை

அதனைத் தொடர்ந்து தேடியதில் காட்டுப்பகுதியில் குழந்தை அழுது கொண்டிந்துள்ளது. மேலும், குழந்தையின் உறுப்பில் ரத்த காயம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து இருவர் மீதும் பகார் அளித்துள்ளனர். அதன்பேரில், இளைஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் மதுபோதையில் இந்த குற்றச் செயலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.