போர்வை, கண்ணாடி, மரக்கட்டைகள் சாப்பிடும் 3 வயது குழந்தை - வேண்டுகோள் விடுத்த தாய்!
சோபா, கட்டில், மெத்தை, கண்ணாடி உள்ளிட்டவற்றை 3 வயது குழந்தை சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது குழந்தை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டேஷி ஹெர்ன் என்ற பெண்ணுக்கு வின்டர் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தரையில் கிடைக்கும் பொருட்களை வாயில் போடுவதும், அதை சாப்பிடுவதுமாக இருந்துள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் சரியாகிவிடும் என அவரின் தாயார் நினைத்துள்ளார். ஆனால் குழந்தை, வழக்கத்திற்கு மாறாக சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுகள், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் போன்ற பொருட்களை சாப்பிடத் தொடங்கியுள்ளது.
கோரிக்கை
இதன் காரணமாக தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களை அந்த குழந்தையையே கண்காணிக்கும் நிலை அவரின் தாயாருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது, எதைப் பார்த்தாலும் சாப்பிட வேண்டும் எனும் நோய் இருப்பதும், ஆட்டிசம் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து பேசிய தாயார் "குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது. நள்ளிரவில் எழுந்து போர்வை, மெத்தையையும் சாப்பிடுகிறது. இதிலிருந்து குழந்தையை மீட்க போராடி வருகிறேன். இதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.