அடேங்கப்பா..கின்னஸ் சாதனை படைத்த எருமை - வயதை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
3 வயதுடைய எருமை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
3 வயது எருமை
தாய்லாந்து நாட்டில் நகோன் ராட்சசிமாவில் உள்ள நின்லனி பண்ணையில் கிங் காங் என்ற நீர் எருமை வளர்க்கப்பட்டு வருகிறது. சராசரியாக 3 வயதில் இருக்கும் நீர் எருமை 6 அடி 8 அங்குல உயரம் கொண்டதாக இருக்குமாம்.
ஆனால் கிங் காங் நீர் எருமைகளை விட கிட்டத்தட்ட 20 அங்குல உயரம் கொண்டதாக உள்ளது. இதனால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
கின்னஸ் சாதனை
இது குறித்து நீர் எருமை கிங் காங் உரிமையாளர் கூறுகையில்,’’கொரில்லா குரங்கு படத்தின் ஈர்ப்பு காரணமாக எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிடப்பட்டதாக கூறினார்.கிங் காங் பிறக்கும் போது மற்ற கன்றுகளை விட மிகவும் உயரமாக இருந்தது என்று கூறினார்.
பொதுவாக ராட்சத விலங்கு எப்போதும் ஆக்ரோசமாக இருக்கும். ஆனால்.இந்த எருமை மிகவும் மென்மையானது.இது வாழைப்பழங்களை சா ப்பிடுவதையும், தன்னைப் பராமரிக்கும் மனிதர்களுடன் விளையாடுவதையும் விரும்புவதாக தெரிவித்தார்.