இந்தியாவில் சிக்கன் சாப்பிட கட்டுப்பாடு..அரசு எடுத்த திடீர் முடிவு - காரணம் என்ன?
கோழி இறைச்சி பயன்படுத்துவதில் மத்தியஅரசு சில கட்டுப்பாடு விதித்துள்ளது.
கோழி இறைச்சி
மகாராஷ்டிரா ,சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கோழிகளுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் கோழிப் பண்ணைகளில் 6,000க்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகள் இறந்தன.
இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, கோழிகளிடம் ரத்த மாதிரியைச் சேகரித்து, விஜயவாடா மற்றும் போபாலில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக சிக்கன் விலை கடுமையாகக் குறைந்துள்ளது.
மேலும் மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. முட்டையின் உற்பத்தியும் கடுமையாகப் பாதித்துள்ளது. தொடர்ந்து மர்ம வைரஸ் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்து வருகிறது.இந்த நிலையில், கோழி இறப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
கட்டுப்பாடு
அதன்படி, மகாராஷ்டிரா ,சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வைரஸ் பாதித்து உயிரிழந்த கோழிகளை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் புதைக்க வேண்டும்.
இறந்த கோழிகளை விற்கக் கூடாது. கோழிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.பண்ணைகள் மற்றும் தீவன சேமிப்பு பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.